சேலத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் 33-வது எழுச்சி தினம் கொண்டாட்டம்

சேலம் : சேலம் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் 33-வது எழுச்சி தினம் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டது.

சேலம் : சேலம் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் 33-வது எழுச்சி தினம் உற்சாகமாக இன்று கொண்டாடப்பட்டது.

சேலம் தெற்கு ரயில்வே மண்டலத்தின் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மேலாளர் யு. சுப்பாராவ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பையும் அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது :- ரயில்வே பாதுகாப்பு படையினர் மீது பயணிகள் பெரிதும் எதிர்பார்ப்பை கொண்டுள்ளனர். அவர்கள் பல்வேறு சவால்களைப் புத்துணர்ச்சியுடன், சிறப்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்து செயல்படுகின்றனர். 



மேலும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு ரயில்வே அமைச்சகம் முக்கியத்துவம் அளிக்கிறது. நாள்தோறும் 315 ரயில்களில் பாதுகாப்பு பணியில் ஆர்.பி.எஃப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பிற்காக மட்டும் 40% வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு பெண் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட நிலையில், பெண் காவலர்கள் அடங்கிய 'சக்தி படை' அமைக்கப்பட்டு, பெண் பயணிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவரப்படி, ரயில்வே துறைக்குச் சொந்தமான பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 55 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறியதாக ரயில்வே துறை சட்டத்தின் கீழ் 6,000 பேரிடம் சுமார் ரூ. 3,25,000 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 



ஆரம்பகட்டமாக, ரூ. 39,50,000 மதிப்பில் கோவை ரயில்நிலையத்தில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல, சேலம் மண்டலத்திற்குட்பட்ட 5 ரயில்நிலையங்களில் நிர்பயா திட்டத்தின் கீழ், ரூ. 3.5 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி.டி.வி.) பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில், 11 சி.சி.டி.வி. கேமராக்கள் மேட்டுப்பாளையம் ரயில்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது. எஞ்சிய 4 ரயில்நிலையங்களில் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும், மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உதவிகளை உரிய நேரத்தில் செய்வதில் சேலம் தெற்கு ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. மேலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில், குழந்தைளுக்கான அவசர உதவி மையம் அமைக்கப்பட்டு, இந்த ஆண்டில் மட்டும் (ஆக.,வரை) சேலம் முதல் கோவை வரையில் 166 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...