ஆதார் அவசியம்தான், ஆனால் வங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம்

அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், வங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயமில்லை என அறிவித்துள்ளது.

அரசு நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், வங்கி, செல்போன், கல்விச் சேவைக்கு ஆதார் கட்டாயமில்லை என அறிவித்துள்ளது. 

ஆதாரை கட்டாயமாக்கும் மத்திய அரசின் திட்டம், ஆதார் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை அளித்துள்ளது. அதாவது, அரசு திட்டங்களைப் பெற ஆதார் எண் கட்டாயம் என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ள வேளையில், தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைக் கோருவது சட்டவிரோதம் எனக் கூறி, தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவல்களைப் பெறும் அதிகாரம் அளிக்கும் சட்டத்தை அதிரடியாக நீக்கியுள்ளது.

ஆதார் தீர்ப்பின் முக்கியம்சங்கள்: 

தனிநபர் கண்ணியம் காக்கப்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கும் ஆதார் கட்டாயமாக்கக் கூடாது.

நீட், சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கும் ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது.

ஆதார் அடையாள அட்டைக்கும் பிற அடையாள அட்டைகளுக்கும் வித்தியாசம் உள்ளது.

ஆதார் அட்டையை போலியாக உருவாக்க முடியாது. 

ஆதார் என்பது மற்ற அடையாள ஆவணங்களைப் போல அல்ல. குறைந்த, அத்தியாவசியத் தகவல்கள் மட்டுமே ஆதாருக்காகப் பெறப்படுகிறது.

ஆதார் சிறந்தது என்பதை விட தனித்துவமானது என்பதே நல்லது. 

தனிநபர் சுதந்திரத்தை ஆதார் திட்டமும், அட்டையும் பாதிக்கிறது என்பதே பிரச்சினையாக உள்ளது.

ஆதார் இல்லை என்பதற்காக தனிநபரின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது.

வங்கி மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கும், செல்போன் சேவைக்கும் ஆதார் எண்ணைக் கேட்கக் கூடாது.

ஆதார் இல்லை எனக் கூறி குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்டவை மறுக்கப்படக் கூடாது.

பான் எண் பெற ஆதார் எண் கட்டாயம் என்பது சரியே.

எந்தக் காரணத்தைக் கொண்டும் தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணை பெறக் கூடாது, ஆதார் எண்ணைக் கையாளக் கூடாது என்று மிக பரபரப்பான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...