டாஸ்மாக் கடையில் பணம் திருட்டு: விற்பனையாளர் உட்பட இரண்டு பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

கோவை: டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து பணத்தை திருடிச்சென்ற வழக்கில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவை: டாஸ்மாக் கடையின் மேற்கூரையை பிரித்து பணத்தை திருடிச்சென்ற வழக்கில் டாஸ்மாக் விற்பனையாளர் உள்பட இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

காந்திபுரம் ஜி.பி சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி கடையினுள் வைக்கப்பட்டிருந்த ரூ.5.3 லட்சத்தை மர்ப நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் அளித்த புகாரின் பேரில் கோவை ரத்தினபுரி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பணத்தை திருடியதாக அதே கடையில் விற்பனையாளராக பணியாற்றிய நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் (37), டாஸ்மாக் கடை உடன் இணைக்கப்பட்ட மதுபான கூடத்தில் சப்ளையராக பணியாற்றி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (37), ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஞானசம்பந்தம் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...