கோவையில் பெண் போலீஸ் மீது கடன் புகார்: விசாரணை நடத்த நீதிபதி உத்தரவு

கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணி புரியும் பெண் போலீஸ் மீதான கடன் புகார் குறித்து விசாரிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகர காவல்துறையில் பணி புரியும் பெண் போலீஸ் மீதான கடன் புகார் குறித்து விசாரிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவரிடம் சத்திரம் வீதியில் வசித்து வரும் கோவை மாநகர போலீசில் பணி புரியும் அம்சவேணி (33) பல தவணைகளாக ரூபாய் 6 லட்சம் வரை பெற்றுள்ளார். இவர் லோகநாதனின் தாயார் நடத்தும் மாத சீட்டிலும் சேர்ந்து சீட்டுத் தொகை பெற்றுள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில், அம்சவேணியிடம் லோகநாதன் பணம் வாங்கிய நாட்கள் அதிகரித்ததை தொடர்ந்து தொகையை பல முறை கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் வராததால் கோவை மாநகர காவல் உதவி ஆணையரிடம் (தெற்குப்பகுதி குற்றப்பிரிவு) புகார் கொடுத்தார்.

இதில் விசாரணைக்குப்பின் 4 லட்ச ரூபாயை அம்சவேணி கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதில் அம்சவேணி கொடுத்த காசோலைகள் பணமின்றி திரும்பியது. இதனால் லோகநாதன் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர் மீதுள்ள கடன் சம்பந்தமான புகாரை விசாரித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க செட்டிபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...