சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த கல்லூரி மாணவருக்கு 7 ஆண்டு சிறை

திருப்பூர்: சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர்: சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கல்லூரி மாணவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கொண்டத்தம்மன் நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் தமிழரசன் (20). தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி, இவரது வீட்டின் அருகே எட்டு வயது சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிறுமி விளையாடிக்கொண்டிருந்த பந்து, தமிழரசன் வீட்டுக்குள் விழுந்துள்ளது.அதை எடுக்க வந்த சிறுமியிடம் தமிழரசன் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக தெரிகிறது.



இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அவினாசி அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ (பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம்) சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்து தமிழரசனை கைது செய்தனர்.

இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த தமிழரசனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10,000-ம் அபராதம் விதித்தும், அபராதத் தொகை கட்டத்தவறினால் 1 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்தும் நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பு அளித்தார்.



இதையடுத்து தமிழரசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...