குளங்கள் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து தன்னார்வலர்களோடு மாநகராட்சி ஆணையாளர் ஆலோசனை

கோவை : கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.

கோவை : கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குளங்கள் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.



மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.



உக்கடம் பெரியகுளத்தின், வடக்கு கரைப்பகுதியை சுமார் 120 அடிகளுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதனால், குளத்தின் நீர் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளதால், 40 அடிகள் மட்டுமே விரிவாக்கம் செய்ய வேண்டும் என தன்னார்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், குளக்கரைகளில் வணிக வளாகங்கள் மற்றும் கான்கிரீட் கட்டுமானங்களை அமைக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.



மாநகர எல்லைக்குள் அமைந்துள்ள எட்டு குளங்களின் கரைகளை புனரமைத்து, குளத்தில் நுழையும் கழிவுநீரினை தடுத்து சுத்திகரித்தல், வருடம் முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்தல், மீன் வளர்ப்பு மையம், நடைபாதைகள், பூங்காக்கள், நவீன கழிப்பிட வசதிகள் ஆகியவற்றை உருவாக்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தின் கரைகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதற்கட்டமாக, இந்த இரண்டு குளங்களிலும் 1௦௦ மீட்டர் தூரத்திற்கு கரைகளை புனரமைத்து, நடைபாதை மற்றும் பூங்கா அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் நவம்பர் மாதத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...