கோவையில் அமைச்சரின் பேனரை கிழித்த தி.மு.க., இளைஞர் கைது : 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

கோவை : செல்வபுரம் பகுதியில் அமைச்சர் பெயருடன் இருந்த பேனரை கிழித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


கோவை : செல்வபுரம் பகுதியில் அமைச்சர் பெயருடன் இருந்த பேனரை கிழித்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.,வை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். 

செல்வபுரம் முத்துச்சாமி காலனி பகுதியைச் சேர்ந்த துரையின் மகன் விக்னேஷ் (24). இவர் செல்வபுரம் பகுதியில் தி.மு.க.,வில் உறுப்பினராக உள்ளார். இவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு செல்வபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி., வேலுமணியின் புகைப்படம் அடங்கிய அ.தி.மு.க.,வின் சுவரொட்டியைக் கிழித்துள்ளார். இந்தக் காட்சி அருகே இருந்த சி.சி.டி.வி.,யில் பதிவாகியிருந்தது. 

இந்த நிலையில், அந்த இளைஞர் மீது அ.தி.மு.க., நிர்வாகி குமார் (35) என்பவர் செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், போலீசார் போஸ்டரை கிழித்த விக்னேஷை இன்று கைது செய்து காவல்நிலையத்தில் வைத்துள்ளனர். மேலும், அவர் மீது 294/b ,427 ,மற்றும் 506 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...