மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாணவர்களோடு களம் இறங்கிய நீதிபதிகள்

கோவை: வனப்பாதை வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகளால் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தி இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களோடு களம் இறங்கியுள்ளனர் மேட்டுப்பாளையம் நீதிமன்ற நீதிபதிகள்.

கோவை: வனப்பாதை வழியே செல்லும் சுற்றுலாப் பயணிகளால் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தி இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களோடு களம் இறங்கியுள்ளனர் மேட்டுப்பாளையம் நீதிமன்ற நீதிபதிகள்.

கோவை மாவட்டம் வழியே நீலகிரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையத்தைக் கடந்தே சென்றாக வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து பிரியும் குன்னூர் மற்றும் கோத்தகிரி சாலைகள் வழியே உதகையை சென்றடையலாம் என்பதால் நாடு முழுவதில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் இதன் வழியே பயணிக்கின்றனர். இம்மலைப்பாதைகள் இருபுறமும் அடர்ந்த வனத்தின் வழியே செல்வதால் சுற்றுலா செல்லும் சிலர் தங்களோடு கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள் போன்றவற்றை பயணத்தின் போது வீசிவிட்டுச் செல்கின்றனர். இதனால் வனச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு வனவிலங்குகள் இவற்றை உண்பதால் உயிரிழந்து வருகின்றன.



வீசப்படும் மது பாட்டில்கள் வனத்திற்குள் உடைந்து சிதறிக்கிடப்பதால் இதனை மிதிக்கும் யானைகளின் கால்களில் கண்ணாடி சிதறல் குத்தி அவற்றின் இறப்பிற்கும் காரணமாகின்றன. இதனைத் தடுக்க இன்று வனத்துறையினர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்ற நீதிபதி ராமநாதன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஆகியோர் இயற்கையை நேசிப்போம் என்ற பெயரில் வனத்தின் வழியே செல்லும் சாலையோரங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.



வனத்தையும் அதில் வாழும் உயிரினங்களையும் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் காட்டை சுத்தப்படுத்தும் நோக்கிலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இப்பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த நீதிபதிகள், வனப்பகுதிக்குள் கழிவுகளை வீசுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை இப்பகுதியைக் கடக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...