அடிச்ச வெயிலுக்கு இதமாக கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யுமாம்

கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நம்மிடம் கூறுகையில், "கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஆனைமலை முதல் கவுண்டம்பாளையம் வரையிலான வட்டாரங்களில் தூரல் மழைக்கு வாய்ப்புள்ளது. 

அதே போல் சூலூர், சுல்தான்பேட்டை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, மதுக்கரை, தொண்டாமுத்தூர் பகுதிகளில் பரவலான மழை எதிர்பார்க்கலாம்.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கேரளா, கார்நாடக பகுதிகளில் சில மாவட்டங்களில் மழை சற்று அதிகமாகக் காணப்படும். இதன் தொடர்ச்சியாக வால்பாறையில் மழை அதிகம் பெய்ய வாய்ப்புள்ளது.

இதனிடையே பகல் நேர வெப்ப நிலையானது 32 டிகிரி செல்சியஸ்யாகவும் இரவு நேர வெப்ப நிலை 22 முதல் 24 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையை பொறுத்தவரையில் 5 முதல் 7 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது.

தென்மேற்கு பருவமழையானது இன்னும் நிறைவடையவில்லை. செப்டம்பர் 30 ல் நிறைவடைய வாய்ப்புள்ளது. 209 மிமீ மழை எதிர்பார்த்த நிலையில் தற்போது 198 மிமீ தென்மேற்கு பருவமழையானது நமக்கு இதுவரை கிடைத்துள்ளது." என்றார்

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...