பீளமேடு அருகே ரயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

கோவை : பீளமேடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கோவை : பீளமேடு அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ராமானுஜம் நகர் ரயில்வே தண்டவாளத்தையொட்டி அடர்ந்த புற்கள் நிறைந்த பகுதி உள்ளது. இந்தப் புல் பகுதியில் நேற்று யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். ஆனால், அந்தத் தீயை யார் வைத்தார்கள்..? எதற்கு வைத்தார்கள்..? என்பதும் தெரியவில்லை. இந்த நிலையில், ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி இன்று எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. பின்னர், சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் பிரேதத்தை ஆய்வு செய்தனர். ஆனால், அங்கு இறந்தவரின் விவரம் குறித்த எந்தவிதமான ஆவணமும் இல்லை.

உடல் முழுவதுமே கருகிய நிலையில் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருந்ததால், இறந்தவர் யார்..? எந்த ஊரைச் சேர்ந்தவர்..? என்பதற்கான எந்தச் சான்றும் கிடைக்கவில்லை. ஆகவே, போலீசார் பிரேதத்தை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். இந்த மர்ம மரணம் தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...