போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக அமைக்கக் கோரி மனு

கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக அமைக்கக் கோரி ரயில் பயனாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று மனு அளித்தனர்.

கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக அமைக்கக் கோரி ரயில் பயனாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று மனு அளித்தனர்.

போத்தனூர் ரயில் நிலையம் கடந்த 1852-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசால் அமைக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தை தற்போதைய ரயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருவதாகவும், கேரள மாநிலத்திற்கு போத்தனூர் ரயில் நிலையம் வழியாக செல்லும் முக்கிய ரயில்கள் இங்கு நிற்காமல் செல்வதாகவும் தெரிகிறது.

பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணிகள், கோவை ரயில் நிலையம் வந்து அங்கிருந்து கிளம்ப வேண்டிய சூழல் உள்ளதால் கோவை வரை வரும் ரயில்களை போத்தனூர் வரை நீட்டிக்க வேண்டும் எனவும் கேரள மாநிலத்திற்கு செல்லும் ரயில்கள் போத்தனூரில் நின்று செல்ல வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக அமைக்கக் கோரி ரயில் பயனாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதன் பின்னர் அவ்வமைப்பினர் கூறுகையில், "கோவை ரயில் நிலையம் நெரிசலான பகுதியில் அமைந்துள்ளதாலும், அங்குள்ள பாதைகள் குறுகிய நிலையில் உள்ள காரணத்தாலும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்களை பிடிக்க முடியாமல் போகிறது. 

தற்போது ரயில்கள் வந்து செல்ல ஒரு வழி பாதை மட்டுமே உள்ளதால் அதனை மூன்று வழி பாதையாக மாற்றுவதுடன், இருள் மயமாக உள்ள பகுதிகளில் பிரகாசமான மின் விளக்குகள் பொருத்த வேண்டும்.

மேலும், போத்தனூர் வரை ரயில்கள் இயக்கப்பட்டும் கேரளா செல்லும் முக்கிய ரயில்கள் இங்கு நின்று செல்லும் பட்சத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள், டாக்சி டிரைவர்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறுவர் என்பதால் போத்தனூர் ரயில் நிலையத்தை இரண்டாவது ரயில் முனையமாக அமைக்க வேண்டும்." என்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...