தமிழகத்தை மறைமுகமாக ஆளுவதன் மூலம் பா.ஜ.க., ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு : முத்தரசன்

திருப்பூர் : தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்வதன் மூலம் பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருப்பூர் : தமிழகத்தை மறைமுகமாக ஆட்சி செய்வதன் மூலம் பா.ஜ.க., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய செயலாளர் அமர்ஜித்கெளர், மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, தேசிய நிர்வாகிகள் ஏராளமானோரும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் தேசிய செயலாளர் அமர்ஜித்கெளர் பேசுகையில், "மத்திய அரசு ஆட்சி செய்வதாகக் கூறி மத மோதல்களையும், வெறுப்பு அரசியலையும் செய்து வருகிறது. மத்தியில் இருந்து பா.ஜ.க., அரசை அகற்றுவதன் மூலம்தான் நம் நாகரீக அரசியலை மீட்டெடுக்க முடியும். அதன் மூலம், தான் நாம் இழந்த சுதந்திரத்தை பெறமுடியும்," என்றார். 



தொடர்ந்து, மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது :- இந்தியாவில் பா.ஜ.க., கட்சி 19 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது என்கிறார்கள். ஆனால், தமிழகத்தையும் சேர்த்து 20 மாநிலங்களை ஆட்சி செய்து வருகிறது. சாதி, மத பிரிவினை குறித்து யார் பேசினாலும், இந்திய கம்யூனிஸ்ட் தொடர்ந்து எதிர்க்கும். அதே வேளையில், வளர்மதி, சோபியா, திருமுருகன் காந்தி, இயக்குநர் கெளதமன் ஆகியோரை உடனுக்குடன் கைது செய்த காவல்துறை, சொந்தமாக செயல்படுவதாக சொல்லிக்கொள்ளும் தமிழக அரசு இன்னும் ஏன் எச்.ராஜா, எஸ்.வி சேகர் ஆகியோரை கைது செய்யவில்லை.

மாணவி சோபியா சொன்னதைப் போல அல்ல, ஓராயிரம் முறை சொல்வோம். எங்களை வேண்டுமானாலும் கைது செய்துகொள்ளலாம். மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசையும் அகற்ற வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...