உடுமலை அருகே டெம்போ கவிழ்ந்த விபத்தில் 40 பெண்கள் படுகாயம் : ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால் விபத்து

திருப்பூர் : உடுமலை அருகே ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால், டெம்போ கவிழ்ந்த விபத்தில் 40 பெண்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

திருப்பூர் : உடுமலை அருகே ஓட்டுநர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால், டெம்போ கவிழ்ந்த விபத்தில் 40 பெண்கள் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



உடுமலை அருகே நாட்டுக்கல் பாளையத்தில் விவசாய வேலைக்கு கூலி ஆட்களை (பெண்கள் ) டெம்போவில் 70-க்கும் மேற்பட்ட பெண்கள் ஏறிச் சென்றுள்ளனர். அதிக பாரம் மற்றும் ஓட்டுநா் குடிபோதையில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த டெம்போ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் 40 பெண்கள் ஆம்புலன்ஸ் மூலமாக உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், பலத்த காயமடைந்த 8 பெண்கள் மேல்சிகிச்சைக்காக அருகே தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மீதமுள்ளவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



டெம்போவில் ஆட்களை ஏற்ற தடை விதிக்கப்பட்ட போதும், அதிகளவில் பெண்களை ஏற்றிச் செல்லும் டெம்போ உரிமையாளர்கள் மீது காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதே இது போன்ற விபத்துகளுக்க காரணமாக உள்ளது. மேலும், டெம்போ ஓட்டுநர் தலைமறைவாக உள்ள நிலையில், தாராபுரம் போலீசார் கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இனிமேல் இது போன்று யாரும் ஆட்களை ஏற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...