மியாவாக்கி திட்டத்தின் கீழ் கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 13,000 மரக்கன்றுகள் நடவு

கோவை : கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின.

கோவை : கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின. 



தமிழகம் முழுவதும் மாபெரும் மியாவாக்கி திட்டத்தின் மூலம் பசுமையை உருவாக்கும் முயற்சியில் நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் (குயிப்) பொருளாளர் உமா சேகர் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, கோவையில் உள்ள நகர்புறங்களை பாதுகாக்கும் விதமாகவும், பசுமையாக மாற்றும் வகையிலும் மியாவாக்கி முறையில் சிறிய பரப்பளவு இடத்தில் அடர்வனம் உருவாக்கும் முயற்சியில் இயற்கை ஆர்வலர்களும், பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. 

இந்தத் திட்டத்தின் கீழ் பெரும்பாலும் வேப்ப மரம், இந்தியன் துலிப் மரம், அசோக மரம், அர்ஜுன் மரம், கம்ஹர் மரம் மற்றும் ரோஸ் மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களின் கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கே.பி.ஆர்., கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மியாவாக்கி முறையில் 13,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டப் பணிகள் தொடங்கின. 'ரோட்டரி வனம்' என்ற தலைப்பில் கோவை ரோட்டரி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தத் திட்டத்தில், கே.பி.ஆர்., கல்வி நிறுவனம், குயிப், ரோட்டரி மையம் 3201 உள்ளிட்டவை ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன. இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர். தொழில் குழுமத்தின் தலைவர் கே.பி., ராமசாமி மற்றும் கோவை மாவட்ட ரோட்டரி 3201 அமைப்பின் தலைவர் ஏ.வி.,பதி மற்றும் குயிப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



இந்த திட்டம் குறித்து நகர்புற பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் கல்வி மையத்தின் இயற்கை கல்வி அதிகாரி எஸ். வருண் கூறுகையில்," நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஒரே மாதிரி பசுமையான தோற்றதை உருவாக்க வேண்டும். இதன்மூலம், இப்பகுதிகளில் குறுகிய காலநிலையை உருவாக்கவும், பராமரிக்கவும் முடியும். இங்கு நடவு செய்யப்படும் மரக்கன்றுகளை ஒரு ஆண்டுகள் பராமரித்தால், பின்னர் நன்கு வளர்ந்து நல்ல நிலையை அடையும்," என்றார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...