கூட்டமாவது...நெரிசலாவது..! 'மேடம் ஒரு செல்பி' : நடிகைக்காக பணியை மறந்த போலீசார்

திருப்பூர்: திருப்பூரில் செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை காண இளைஞர்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பணியை மறந்து, நடிகையுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் செல்போன் கடையின் திறப்பு விழாவிற்கு வந்த நடிகையை காண இளைஞர்களின் கூட்டம் அலை மோதிய நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் பணியை மறந்து, நடிகையுடன் செல்பி எடுப்பதில் ஆர்வம் காட்டியது அனைவரிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.



சுப்ரீம் மொபைல்ஸின் 30 வது கிளையை நடிகை நிக்கி கல்ராணி திறந்து வைத்தார் - 100 ருபாய்க்கு விற்பனை என அறிவிக்கப்பட்டதால் காலை முதலே ஏராளமானோர் கடை முன் திரண்டனர் . சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளையை அதிகப்படுத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் தனது 30-வது கிளை நேற்று திறக்கப்பட்டது. 

இந்த கடையினை நடிகை நிக்கி கல்ராணி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் ஆகியோர் திறந்து வைத்தனர். துவக்கவிழா சலுகையாக முதல் 100 நபர்களுக்கு 100 ருபாய்க்கு செல்போன் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டிருந்ததால் காலை முதலே குமரன் சாலையில் ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வாங்கி சென்றனர். 



குமரன் சாலையில் காலை முதலே 500-க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில், நடிகை நிக்கி கல்ராணி கடையை திறந்து வைக்க வந்திருந்ததால் அவரைக் காணவும், அவருடன் செல்பி எடுக்கவும் ஏராளமானோர் திரணடனர். ஆனால், அவர்களை ஒழுங்குப்படுத்த வேண்டிய காவல்துறையினரோ, தங்களது பணியினை மறந்து, ரசிகர்களுக்கு முன்னதாக முண்டியடித்திக் கொண்டு நடிகையோடு செல்பி எடுத்துக்கொண்டனர். இது அங்கிருந்தவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. மேலும், 100 ருபாய் செல்போனை பெறவும் அதிகளவில் பொதுமக்கள் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர் . 



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...