தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு திகழ்கிறது : டி.டி.வி., தினகரன் குற்றச்சாட்டு

திருப்பூர் :தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக உடுமலையில் பொதுமக்களிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூர் : திருப்பூர் : தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக உடுமலையில் பொதுமக்களிடையே அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

திருப்பூா் மாவட்டம் முழுவதும் உள்ள மக்களை சந்திக்கும் வகையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் மேற்கொண்டு வருகிறார். பயணத்தின் 2-வது நாளான இன்று மடத்துக்குளத்தில் இருந்து மக்கள் சந்திப்பை தொடங்கினார். 

மடத்துக்குளம் நால்ரோட்டில் அவர் பேசியதாவது:- தமிழகத்தில் அடிமைகள் ஆட்சி செய்கின்றனர். எம்.ஜி.ஆா்., மறைந்த பிறகு ஜெயலலிதாவால் அ.தி.மு.க., ஆட்சி அமையப்பெற்றது. அம்மாவின் மறைவிற்குப் பிறகு சசிகலாவால் அரியணையில் ஏற்றப்பட்டவர்கள் செய்த துரோகத்தின் காரணமாக சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதாவால் அரியணை ஏற்றப்பட்டவர்கள் அடிமை ஆட்சி நடத்தி வருகிறது. ஊழல் ஆட்சி நடத்தி வருகின்றனர். எல்லாத் துறையிலும் ஊழல் நடக்கிறது. 



ஜெயலலிதாவால் அரியணை ஏற்றப்பட்டவர்கள் அடிமை ஆட்சி நடத்தி வருகின்றனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க.,வின் அடிமைகளாக ஆட்சி செய்து வருகின்றனர். ஜெயலலிதா எதிர்த்த நீட் தோ்வு, ஸ்டொ்லைட், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், தற்போதைய அடிமை ஆட்சியாளர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசுக்கு தலையாட்டும் அடிமைகளாக செயல்பட்டு வருகின்றனர். தற்போதைய அமைச்சர்கள் செய்த ஊழல்கள் நீதிமன்றத்தின் மூலம் விசாரணை செய்யப்படும் போது, அவா்களின் முகத்திரை கிழிக்கப்படும். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தும் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு உள்ளது.

கர்நாடகாவில் இருந்து வரும் தண்ணீரை சேமித்து வைக்க எந்த திட்டமும் இவர்களால் செயல்படுத்தமுடியவில்லை. வரும் நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, தளவாய்பட்டினம், தாராபுரம், குண்டடம் பகுதிகளில் மக்களை சந்தித்து பேசினார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...