குற்றவாளியை ஜாமினில் எடுக்க போலியான ஆவணங்களை சமர்பித்த விவகாரம் : வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களின் மீது வழக்குப்பதிவு

கோவை : போதைப் பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்த விவகாரத்தில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களின் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை : போதைப் பொருள் வழக்கில் கைதான முகமது சிஹாப் என்பவரை ஜாமீனில் எடுக்க போலி மருத்துவ ஆவணங்கள் தாக்கல் செய்த விவகாரத்தில் வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்களின் மீது கோவை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர் ஜக்ரியா, தனியார் மருத்துவமனை மருத்துவர் ராமகிருஷ்ணன், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் உஷா, மன்சூர் உட்பட சிலர் உதவியுடன் போதைப் பொருள் கடத்தல் குற்றவாளியை விடுவிக்க வலிப்பு நோய் இருப்பதாக போலியான ஆவணங்களை கடந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகமடைந்த நீதிபதி, சான்றிதழ் குறித்த ஆய்வில் குற்றவாளிக்கு ஆதரவாக மருத்துவர்கள் போலியான சான்றிதழ்களை அளித்ததை உறுதிப்படுத்தினார். 

இதையடுத்து, இவர்கள் மீது போலியான ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி சஞ்சய்பாபா கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டார். மேலும், கோவை மாநகர காவல் ஆணையர் மேற்பார்வையில் வழக்கினை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி ஆணையிட்டு இருந்தார்.

இந்த நிலையில், இன்றியமையா பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை எழுத்தர் வசந்தகுமாரியின் புகாரின் அடிப்படையில் வழக்கறிஞர், மருத்துவர்கள் என 6 பேர் மீதும் 193, 196, 200, 468,471 & 420 இ.த.ச., r/w 109, இ.த.ச., பிரிவுகளில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...