தைரியமிருந்தால் என்னை அடித்து பார்க்கட்டும் : கருணாஸுக்கு சூலூர் எம்.எல்.ஏ., சவால்

கோவை : நான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் முதலமைச்சர் இருப்பதாகக் கூறிய எம்.எல்.ஏ., கருணாஸ், முடிந்தால் என்னை அடித்துப் பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ.,கனகராஜ் சவால் விடுத்துள்ளார்.



கோவை : நான் அடித்து விடுவேன் என்ற பயத்தில் முதலமைச்சர் இருப்பதாகக் கூறிய எம்.எல்.ஏ., கருணாஸ், முடிந்தால் என்னை அடித்துப் பார்க்கட்டும் என சூலூர் எம்.எல்.ஏ.,கனகராஜ் சவால் விடுத்துள்ளார். 

கோ- ஆப்டெக்ஸ் மருதம் விழா கால சிறப்பு விற்பனை மற்றும் விரிவாக்கப்பட்ட நிலையத்தை ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், பி.ஆர்.ஜி., அருண்குமார், சூலுர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சிக்கு பின்னர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான் அடித்து விடுவேன் என முதலமைச்சரே பயப்படுகிறார் என்ற சர்ச்சையாக பேசியது கண்டனத்திற்கு உரியது. கருணாஸ் சின்ன பையன் அடக்கி வாசிக்க வேண்டும். இது போன்று பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது மாதிரியான அவரது பேச்சு ஈனத்தனமான பேச்சாகும். இவ்வாறு பேசி சாதி பிரச்சினையை தூண்டி விடுகின்றார் கருணாஸ். 

இவ்விவகாரத்தில் கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். இல்லாவிடில் ஆயிரம் கருணாஸ் உருவாகி விடுவார்கள். மேலும், கண்டிப்பாக கருணாஸை கைது செய்ய வேண்டும். அடித்தால் முதலமைச்சர் வாங்கிக்கொள்வார். ஏனெனில், அவர் இயேசு நாதரை போன்றவர். தைரியமிருந்தால் என்னை அடித்து பார்க்கட்டும், இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...