உதகையில் வீடு புகுந்து 15 சவரன் நகை கொள்ளை: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பூட்டியிருந்த வீட்டில் 15 சவரன் நகை மற்றும் ரூ.6000 கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தினார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகையில் பூட்டியிருந்த வீட்டில் 15 சவரன் நகை மற்றும் ரூ.6000 கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆய்வு நடத்தினார்.



உதகை ஹெச்.பி.ஆர் காலனிய சேர்ந்தவர் ரோகிணி. உதகை அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு 7 மணிக்கு பணிக்கு சென்றுவிட்டு இன்று காலை வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணி வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் நகை மற்றும் ரூ.6000 கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சண்முக பிரியா, உதகை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் திருமேனி மற்றும் கைரேகை நிபுணர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடுதல் நடைபெறுவதாகவும், நாளைக்குள் கொள்ளையர்களை பிடித்து விடுவோம் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...