வனவிலங்குகள் வாரத்திற்கான போட்டிகளில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு

கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

கோவை: வனவிலங்குகள் வாரத்தின் ஒரு பகுதியாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள பல்வேறு போட்டிகளில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாணவர்களுக்கு கோவை மாவட்ட வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) செண்பகபிரியா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வினாடி-வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் தமிழக வனத்துறை சார்பில் நடைபெற்ற உள்ளன. கோவை வனக்கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு காலை 8 மணியளவில் இந்த போட்டிகள் தொடங்குகிறது.

ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும் அணிக்கு இரண்டு மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த போட்டிகள் சூழல் மற்றும் வன விலங்குகள் தொடர்பாக இருக்கும். 

வன விலங்குகளை காப்பதன் அவசியம், மற்றும் அவற்றிற்கான நமது பங்களிப்பு உள்ளிட்ட தலைப்புகளில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. தேவையான உபகரணங்களை மாணவர்கள் எடுத்து வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, 

தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: வன அலுவலர் அலுவலகம்- 0422-2456911, தினேஷ் குமார் (ACF) - 9443082214, செந்தில்குமார் வனச்சரகர்-9994449248.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...