தொழில்துறை வெளிமாநிலங்கள் நோக்கி செல்வதற்கு மத்திய மாநில அரசுகளின் கவனக்குறைவே காரணம் - கமலஹாசன் குற்றச்சாட்டு

திருப்பூர் : தமிழகத்தில் தொழில்துறை வெளிமாநிலங்கள் நோக்கி செல்வதற்கு மத்திய மாநில அரசுகளின் கவனக்குறைவே காரணம் என திருப்பூரில் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் குற்றம்சாட்டினார்.

திருப்பூர் : தமிழகத்தில் தொழில்துறை வெளிமாநிலங்கள் நோக்கி செல்வதற்கு மத்திய மாநில அரசுகளின் கவனக்குறைவே காரணம் என திருப்பூரில் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும்  நடிகருமான கமலஹாசன் குற்றம்சாட்டினார்.

திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரண்டுநாள் பயணமாக வந்திருந்தார். திருப்பூரில் பல்வேறு இடங்களில் மக்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசுகையில், "தமிழகம் எப்போதும் விழித்து தான் இருக்கும், இருக்க வேண்டும். ஆனால், சமீப காலமாக தமிழகம் தூங்கி கொண்டு இருக்கிறது. மதுவை கொடுத்து தமிழகத்தைத் தூங்க வைத்துள்ளனர். அந்த நிலை இனி மாற வேண்டும். கல்வியை தாங்கி பிடிக்க வேண்டிய அரசு, அதைவிடுத்து மதுகடைகளை தாங்கி நிற்கிறது. நீங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி கேட்க வேண்டாம். ஏனென்றால் நான் வரவேண்டும் என்றால், அதை நீங்கள் தான் செய்ய வேண்டும். பின்பு நாமாக செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. இளைஞர்கள் அனைவரையும் நான் வேலை தேடும் இளைஞர்களாக பார்க்கவில்லை வருங்கால முதலாளிகளாக தான் பார்க்கிறேன். சிறு தொழில்கள் மூலம் அவர்களை மாற்ற முடியும் அது நம்மால் முடியும்", என்றார். 



மேலும், இளைஞர்களை அனைவரும் எனக்கு முதலாளிகளாக தான் தெரிகிறார்கள். எனக்கு தெரியும் முதலாளிகளை எங்கு வைக்க வேண்டும், திருடர்களை எங்கு வைக்க வேண்டும் என்று அனைவரையும் வைக்க வேண்டிய இடத்தில் வைக்கலாம். இது மின்னல் போல், வந்து மறைந்து செல்லும் பயணமல்ல, இது தொடரும் என்றார். 

இறுதியாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் தொழில்துறை மற்ற மாநிலங்களை நோக்கி செல்கிறதென்றால் அது மத்திய மாநில அரசுகளே காரணம் எனவும், இழந்தபின்பு ஆறுதல் தெரிவிப்பதை விடுத்து இழப்பு ஏற்படும் முன் அதனை சரிசெய்ய கவனம் செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர். 

மேலும் மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மக்கள் பல குறைகளை தெரிவித்திருக்கின்றனர். அவற்றை சரி செய்ய மக்கள் நீதி மய்யம் முனைப்பு காட்டும் எனவும், தமிழக வளர்ச்சிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் மக்கள் நீதி மய்யம் செயல் திட்டங்களை உருவாக்கி வருகிறது அதனைத் தொழில்துறையோடு கலந்து பேசி செயல்படுத்த முனைப்பு காட்டுவோம் எனவும், மக்கள் நீதி மய்யத்தின் ஸ்லோகமான நாளை நமது என்பதை மக்கள் உணர்ந்துகொண்டதால் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அதிகரித்துவருவதாகக் கூறினார். 



முன்னதாக ஏற்றுமதியாளர்களிடம் பேசுகையில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவு பின்னலாடை துறை சரிவை கண்டிருக்கிறது, பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி உள்ளிட்ட மும்முனை தாக்குதலால் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சினிமாத்துறையும் அதில் பாதிக்கப்பட்டது. அதற்கான கடுமையான குரலை நானும் எழுப்பியிருக்கிறேன் எனவும் உங்களுக்கான உரிமையை நீங்கள் கேட்டுபெறுங்கள், அதற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...