ரேகிங் செய்த மூன்று மாணவர்கள் கைது: உதகை போலீசார் நடவடிக்கை

நீலகிரி: உதகை அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி: உதகை அரசு கலைக் கல்லூரியில் ரேகிங் செய்த மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கல்லூரியில் கிருஷ்ணகுமார் என்பவர் முதலாம் ஆண்டு விலங்கியல் படித்து வருகிறார். அதே துறையை சேர்ந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் சிவகுமார், செல்வகுமார், நிசான் ஆகியோர் கிருஷ்ணகுமாரை ரேகிங் செய்துள்ளனர்.



இதற்கு கிருஷ்ணகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் மூன்று பேரும் கிருஷ்ணகுமாரை பலமாக தாக்கியுள்ளனர். வலி தாங்க முடியாமல் கிருஷ்ணகுமார் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ஈஸ்வர மூர்த்தி மற்றும் துறை பேராசிரியர்கள், ரேகிங் செய்த மூன்று மாணவர்களின் பெற்றோரை அழைத்து அறிவுரை கூறினர்.

மேலும், போலீசில் புகார் கொடுத்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அதனால் மாற்றுச் சான்றிதழ் வாங்கிச் செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு ஒப்புக் கொண்ட அவர்கள் திடீரென காணாமல் போயினர்.



இதனால் கிருஷ்ணகுமார் கொடுத்த புகாரை அக்கல்லூரியின் முதல்வர் உதகை காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் கமலக்கண்ணன் ரேகிங் செய்த மூன்று மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...