சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பரத்திற்கான குறும்படங்களுக்கு விருதுகள்

நீலகிரி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பரத்திற்கான குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி : சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறந்த விளம்பரத்திற்கான குறும்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும் மொத்தம் 8,000 பள்ளிகளில் மாவட்டத்திற்கு 250 பள்ளிகள் வீதம் சூழல் மன்றங்களுக்கு 40 முதல் 50 மாணவர்களைக் கொண்டு தேசிய பசுமைப்படை செயல்படுகிறது. மேலும், தமிழக அரசின் நிதியுதவியுடன் 11,469 பள்ளிகளில் தமிழ்நாடு முழுவதும் சூழல் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. 

சுற்றுச்சூழல் அமைச்சரின் அறிவிப்பின்படி, பொதுமக்களைச் சென்றடையும் வகையில், உரிய நிறுவனங்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து நிலம், காற்று, நீர், வனம், தொழிற்சாலை நடவடிக்கைகள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட ஏதாவது ஒரு தலைப்பில், பொது ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஏதுவான, தக்க தரமான விளம்பரப்படங்கள், விளம்பர பட தயாரிப்பு நிறுவனங்கள்/திரைப்பட இயக்குநர்கள்/திரைப்பட பயிற்சி மையம் மற்றும் திரைப்பட துறையில் அனுபவம் உள்ள தனிநபர்களிடம் இருந்து குறுந்தகடு, பென் டிரைவ் மூலம் சுற்றுச்சூழல் துறைக்கு 15.12.2018-க்குள் அனுப்ப வேண்டும்.

சிறந்த முதல் 3 படங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுத் தொகையாக முறையே ரூ. 7 லட்சம், ரூ. 6 லட்சம் மற்றும் 5 லட்சம் வழங்கப்படுவதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சான்றிதழ்களும் வழங்கப்படும். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...