கோவையில் குடியிருப்புகளுக்குள் நுழையும் யானைகளை விரட்டும் வனத்துறையினரின் முயற்சிக்கு வரவேற்பு

கோவை : மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோவை வனப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் இருப்பிடங்களுக்குள் நுழையும் வனவிலங்குகளை விரட்ட ஊதியத்துடன் கூடிய பணியாட்களை நியமினம் செய்துள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை : மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள கோவை வனப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் இருப்பிடங்களுக்குள் நுழையும் வனவிலங்குகளை விரட்ட ஊதியத்துடன் கூடிய பணியாட்களை நியமினம் செய்துள்ள வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

கடந்த சில நாட்களாக கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மனித - விலங்குகள் மோதல் அதிகளவில் காணப்படுகிறது. எனவே, அதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில், சிம்ப்ளிசிட்டிக்கு மாவட்ட தலைமை வனப் பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் தீபக் ஸ்ரீவத்ஸவா பிரத்யேகமாக கூறுகையில், "யானை - மனித மோதல்களை தடுக்கும் வகையில் களிறு திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. யானைகளை துன்புறுத்தாமல், அதன் போக்கில் வனத்திற்குள் அனுப்பும் வகையிலான பணிகள் களிறு திட்டத்தில் மேற்கொள்ளப்படும். மேலும், இந்தத் திட்டத்தை அமல்படுத்த ஒத்துழைக்கும் விவசாயிகளுக்கு ஊதியம் வழங்கப்படும்," இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறையினருக்கு உதவி செய்த விவசாயிகள் உள்பட வெளிநபர்களுக்கு எந்தவித ஆதாயமும் கொடுக்கவில்லை. இந்த நிலையில், முதல்முறையாக அவ்வாறு உதவுபவர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ப்ரண்டஸ் ஆப் ஃபாரஸ்ட் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்குள் நுழையும் வனவிலங்குகளை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு ஊதியமும், அடையாள அட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. 

வேட்டை தடுப்பு காவலர்கள், அதிவிரைவு படையினர் என 150-க்கும் மேற்பட்டோர் இந்த வனப்பகுதிகளில் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், யானைகளின் இயல்பு குறித்த அடிப்படை தகவல்களுடன் விவசாயிகளுக்கு வேட்டைதடுப்பு காவலர்களால் பயிற்சி அளிக்கப்படும். வனத்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு வனஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இதேபோன்று, கேரள வனத்துறையினரால் ஊதியம் வழங்கப்பட்டு, விவசாயிகள் அடங்கிய 'வன சம்ரக்ஷசனா சமிதிஸ்' என்ற குழு அமைத்து சோலார் வேலிகள் மற்றும் எல்லைகளில் அகழிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா...? என்பதை ஆய்வு செய்து வருகின்றனர். வனத்துறையினரின் இந்த திட்டத்தினால் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியளவில் சற்று உதவிகரமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக அரசியல், மதம் அல்லாத விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில உறுப்பினர் ஆர். மனோகர் கூறுகையில், "யானைகளால் விவசாய நிலங்கள் சேதப்படுத்துவதினால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, இது போன்ற சிறு ஊதியங்கள் அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கின்றன," என்றார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...