திருப்பூரில் டெங்கு பீதி: தேங்கியுள்ள சாக்கடை கழிவுகளை அகற்ற கோரிக்கை

திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பீதி தொற்றிக்கொண்டுள்ளது.

திருப்பூர்: திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பீதி தொற்றிக்கொண்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் அதிக அளவில் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளன. இந்த பனியன் நிறுவனங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர்.



இந்த சூழலில், அப்பகுதியில் பலருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, பொதுமக்கள் மத்தியில் டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு குறித்து லட்சுமி நகர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ரத்த மாதிரி சேகரித்து மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் பராமரிக்கப்படாமல் உள்ள 3 வீடுகளுக்கு மாநகராட்சி சுகாதார துறையினர் எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தனர். மாநகராட்சி சுகாதார துறை சார்பில் அங்கு சிறப்பு முகாம் அமைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், திருப்பூர் மாநகராட்சி 12-வது வார்டு முருகம்பாளையம், ராஜபாளையம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதனிடையே 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்னரை அடி குழாய் கொண்டு பாதாள சாக்கடை கட்டப்பட்டு இப்பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகள் இந்த குழாயின் மூலம் சென்றது.

தற்போது அந்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாக்கடையில் தேங்கியுள்ள கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முதல் உதவி அதிகாரிகள் பலரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



மழைக்காலத்தில் சாக்கடை நீரோடு மழை நீர் கலந்து பெரிய அளவில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் முன் மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...