கோவையில் மேலும் ஒரு குடோனில் 212 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: புலியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 212 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: புலியகுளம் பகுதியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 212 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.



இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதிகாரிகளின் தொடர் சோதனைகள் இருந்தும் சமூக விரோதிகள் தடை செய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்கின்றனர். பெட்டிக் கடைகளிலும், ஒரு சில கடைகளிலும் குட்கா பொருட்கள் வழக்கம்போல இன்னும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், புலியகுளம் பகுதியில் சுயம்பு ராஜா என்பவர் என்பவர் கடந்த 6 மாதங்களாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதற்காக வைத்திருக்கும் குடோனில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அதிகாரிகள் அங்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.



சோதனையில், அங்கிருந்த 212 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 1,75,000 எனவும் தெரிவித்தனர். 

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது:- நாங்கள் இந்த பான்மசாலா மாதிரிகளை எடுத்துள்ளோம். இந்த மாதிரிகளைப் பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதிலிருந்து வரும் ஆய்வறிக்கையைக் கொண்டு சட்டப்படியான நடவடிக்கைகளை எடுப்போம். மேலும், இந்த நபர் கடையை நடத்துவதற்கான உரிமம் பெறாமல் உள்ளார். அதேபோல, தொடர்ந்து இதுபோன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பதுக்கி வைத்திருந்தால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...