2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் - இல.கணேசன்

திருப்பூர் : 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்றும் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.


திருப்பூர் : 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என்றும் தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்து தான் போட்டியிடும் என திருப்பூரில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருப்பூர் மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எச்.ராஜா பேசியது குறித்து இருவேறு விதமான ஆடியோவுடன் கூடிய வீடியோக்கள் பரவி வருகிறது. .ஆய்வுக்கு பிறகே எது உண்மை என தெரிந்த பின்பு தான் கருத்து கூறமுடியும், எதுவானாலும் எச்.ராஜா நீதிமன்றத்தில் நிரூபிப்பார்", என்றார்.

விநாயகர் சிலை ஊர்வலத்திற்குப் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட தடைகளை பற்றி பேசாத எதிர்க்கட்சிகள் அதனை திசை திருப்ப எச்.ராஜாவின் பேச்சுகளை பூதாகரமாக்கி வருகின்றனர். வளர்ச்சிக்கு மறுபெயர் நரேந்திர மோடி என்பதால் இது தனி நபர் பிறந்த நாளாக நாங்கள் நினைக்கவில்லை எல்லா துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் அரஙாங்கம் செய்த தவறுகளை சரி செய்து நாட்டை முன்னேற்ற பாதைக்கு 4 ஆண்டுகளில் கொண்டு சென்றுள்ளதாக கூறினார். 

மேலும், 2019 ம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவோம் என்பதை விட கடந்த முறை வெற்றி வாய்ப்பு கிடைக்காத இடங்களிலும் 2019ம் ஆண்டு வெற்றி பெறுவோம் என்றார். 

அதேபோல, தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டியின் போது ஓட்டுநர் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிருபர் அல்லாத ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் இடையூறு செய்ததால் அவரை, கட்சியினர் அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம் என்று கூறிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு தற்போதைய பாஜக அரசு காரணமல்ல என்றாலும் கூட, மக்கள் நலன் கருதி அவற்றை குறைப்பதற்கு சிறப்பு அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், காங்கிரஸ் அரசு செய்த தவறால் ஏற்பட்ட 1 லட்சத்து 44 ஆயிரம் கோடி கடன் கிட்டத்தட்ட அடைக்கப்பட்டுள்ளது என்றார். 

மேலும், தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைத்துதான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும். அது யாருடன் என எதிர்காலத்தில் முடிவெடுப்போம். தற்போதுவரை அனைத்துக்கட்சியையும் சம தூரத்தில்தான் வைத்துள்ளோம் என்று இல.கணேசன் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...