சூயஸ் ஒப்பந்தத்திற்கு எதிராக மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகைப் போராட்டம்

கோவை : 24 மணிநேர குடிநீர் விநியோகத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

கோவை : 24 மணிநேர குடிநீர் விநியோகத்திற்காக சூயஸ் நிறுவனத்தோடு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி, பல்வேறு அமைப்புகள் சார்பில் கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு நாளை முற்றுகை மற்றும் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை வடக்கு மண்டலம் அலுவலகம் முன்பு சி.பி.எம்., அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது. இதில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி..ஆர்.நடராஜன், சி.பி.எம்., மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி மற்றும் மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யு., உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்கின்றன.

கோவை கிழக்கு மண்டல அலுவலகம் முன்பு நடக்கவுள்ள போராட்டத்தில், சி.பி.எம்., மாநிலக்குழு உறுப்பினர் சி. பத்மநாபன் தலைமையில் சி.ஐ.டி.யு., வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

கோவை மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.,புரம் அலுவலகம் எதிரே மாதர் சங்க மாநில துணை செயலாளர் ஏ. ராதிகா, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முற்றுகை நடைபெறும். இதில், மாதர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம், மலர் தொழிலாளர்கள் சங்கம், தங்கநகை தொழிலாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், கைவண்டி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் பங்கேற்க இருக்கின்றனர்.

கோவை தெற்கு மண்டல அலுவலகம் முன்பு விவசாய சங்கத்தின் அமைப்பாளர் எஸ். கருப்பையா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெறவிருக்கிறது. இதில், விவசாய தொழிலாளர் சங்கம், விவசாயிகள் சங்கம் மற்றும் கட்டிட தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., இதர பிரிவு தொழிலாளர்கள் பங்கேற்க உள்ளனர். 

கோவை மத்திய மண்டலம் அருகே தி.மு.க.,வின் ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறவிருப்பதால், அங்கு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...