கனமழையால் சாக்கடை நீரில் மிதக்கும் மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளி : அதிகாரிகளின் மெத்தனத்தால் சிரமப்படும் மாணவிகள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த சாக்கடை கழிவு நீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், வகுப்பறைக்கு சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பெய்த கன மழையால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்குள் புகுந்த சாக்கடை கழிவு நீரை வெளியேற்றுவதில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், வகுப்பறைக்கு சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை மாணவிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட அண்ணா மார்க்கெட் அருகே அமைந்துள்ள நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி அருகே உள்ள சாக்கடை கால்வாய் சரிவர ஆழப்படுத்தாத காரணத்தால், அதில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை தண்ணீர் பள்ளிக்குள் நுழைந்து வருகிறது. இதனால், மாணவிகள் இந்த சாக்கடை நீரினுள் நடந்து தான் பள்ளிக்குள் நுழைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 



இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் நகரில் மாலையில் பெய்த கன மழையால் மீண்டும் பள்ளிக்குள் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து பள்ளிக்குள் தேங்கியது. இதனால், மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள், சாக்கடை நீரில் நடந்து பள்ளியை விட்டு வெளியேறினர். இதனால், மாணவிகளுக்கு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வலியுறுத்திய பெற்றோர், தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...