கோவையைச் சேர்ந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனத்திற்கு சர்வதேச விருதுகள்

கோவை: சர்வதேச அளவில் சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில், கோவையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன.

கோவை: சர்வதேச அளவில் சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது வழங்கும் விழாவில், கோவையைச் சேர்ந்த நிறுவனத்திற்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. 



சர்வதேச அளவில் சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது வழங்கும் தைவானில் நடந்தது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்களுக்கும், புதிய தயாரிப்புகளை சந்தைகளில் அறிமுகப்படுத்திய நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டன. அந்த வகையில், கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட கோவையைச் சேர்ந்த நிறுவனமான சித்ராம் சாக்லெட் நிறுவனத்திற்கு ஆசிய மற்றும் பசிபிக் அளவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. 



நாட்டுச் சர்க்கரையால் செய்யப்பட்ட டார்க் சாக்லெட் மற்றும் பலசுவைகளைக் கொண்ட பால் சாக்லெட் ஆகிய இரு தயாரிப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அளவிலான சாக்லெட் தயாரிப்புகளுக்கு இந்திய அளவில் விருது கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.

இது தொடர்பாக சித்ராம் சாக்லெட் நிறுவனத்தைச் சேர்ந்த அருண் விஸ்வநாதன் கூறியதாவது : எங்களிடம் விற்பனைக்குள்ள சாக்லெட்டுகள் கேரளாவில் இருந்து கொண்டுவரப்படும் பாதாம் மற்றும் உள்ளூர் நாட்டுச் சர்க்கரையின் மூலம் தயாரிக்கப்படுகின்றன. வேறு எந்த செயற்கை காரணிகளையும் பயன்படுத்துவதில்லை, என்றார். 



"எனது தாய் சித்ரா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். அவரை நினைவுபடுத்தும் விதமாக இந்த சாக்லெட் நிறுவனத்தை தொடங்கினேன். எங்களது தயாரிப்புகள் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதற்கு காரணம், வேறு எந்த செயற்கை காரணிகளையும் பயன்படுத்தாததுதான். சென்னையில் கடந்த ஜுன் மாதம் நடந்த சுவையான சாக்லெட் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதுவே, சர்வதேச அளவில் விருது கிடைக்க வழிவகுத்தது." இவ்வாறு கூறினார் அருண் விஸ்வநாதன்.





Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...