சத்தியமங்கலம் அருகே பேருந்து விபத்தில் ஒருவர் பலி : படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை : சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



இன்று காலை சுமார் 11 மணியளவில் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் பசுவனபுரம் பகுதியில் அதிவேகமாக கே.ஜி.ஆர்., என்ற தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. 

அப்போது, அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்திற்கு இடையே திடீரென இருசக்கர வாகனம் புகுந்தது. இதனால், நிலைகுலைந்து போன ஓட்டுநர், பேருந்தை நிறுத்த முயற்சிக்கும் போது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 35 பேர் படுகாயமடைந்தனர். இதில், ஒருவர் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.



காயமடைந்தவர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் சிலர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 

இதில், குப்புசாமி, மாதேவி, மஞ்சுளா, சிவராஜ், இலையப்பன், பழனியம்மாள், வெள்ளையம்மாள், ராஜாத்தி மற்றும் ஒருவரின் பெயர் தெரியவில்லை. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமாக பேருந்து வந்ததே இந்த விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...