எச். ராஜாவிற்கு பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும் : கோவையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

கோவை : காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் எச். ராஜா பேசியிருப்பது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என்றும், அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.


கோவை : காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் எச். ராஜா பேசியிருப்பது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன் என்றும், அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

கோவை பெரியகடை வீதியில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசியதாவது:- விலைவாசி உயர்வு மக்களை பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது கண்டிக்கதக்கது. சிலையை அவமதித்தவர்கள் மனிதர்களே கிடையாது, காட்டு மிராண்டிகள். தமிழகத்தில் ஜனநாயக உரிமையும், கருத்துரிமையும் இருப்பதால்தான் எச். ராஜாவால் பேசமுடிகின்றது. எச். ராஜா பேசியதையும், மாணவி சோபியா பேசியதையும் ஒப்பிட்டு பேசுவது சரியல்ல. 

தமிழிசைக்கு ஏற்பட்டது போல அரசியல் கட்சியினர் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதால் சோபியா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அ.தி.மு.க., சிறப்பாக, தெம்பாக இருக்கிறது. இங்கிருந்து ஒருவர் போனால் 10 பேர் வருவார்கள். 

எச். ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்கு முதலில் பிரஷர் இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அவதூறு கூறியவர்கள் மீது அம்மா குற்றச்சாட்டின் அடிப்படையில் அவதூறு வழக்கு தொடுத்தார். இப்போது பிரச்சினையில்லாத ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி வழங்கி வருகிறார்.

குற்றம் சொல்வது தி.மு.க.,வின் வாடிக்கை. எதிர்கட்சியின் பணியை ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழ்நாடு காவல்துறை இந்திய அளவில், உலகளவில் சிறந்தது என்ற பேச்சு உள்ள நிலையில், எச். ராஜா காவல்துறை பற்றியும் நீதிமன்றம் பற்றியும் பேசியுள்ளது கோபத்தின் வெளிப்பாடாகத்தான் பார்க்கிறேன். 

அவர் மீதான வழக்கில் காவல்துறை மற்றும் நீதிமன்றம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளும். அ.தி.மு.க.,வில் உயர்பதவி முதலமைச்சர் தான் வேறு யாரும் உயர் பதவி இல்லை, என்றார். 

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...