திருப்பூரில் பட்டா வேண்டி பொதுமக்களுடன் வந்து ஆட்சியரிடம் மனு அளித்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ

திருப்பூர்: திருப்பூரில் 30 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருப்பூர்: திருப்பூரில் 30 வருடங்களுக்கு மேலாக ஒரே இடத்தில் வசித்து வரும் பொதுமக்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக்கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ உட்பட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களாக 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1999-ம் ஆண்டு பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக அரசு அவர்களுக்கு பட்டா வழங்க முயற்சி எடுத்தது.

ஆனால், அந்த இடத்தில் ஏற்கனவே அரசிடம் விவசாயத்திற்காக பட்டா பெற்று, அதனை வீட்டு மனைகளாக விற்க முயற்சித்தற்காக பட்டாவை ரத்து செய்த நிலையில், பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் அரசு வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி இன்னும் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்துவதாகக் கூறப்படுகிறது.

இதனை மாநில அரசின் கவனத்திற்கு மாவட்டம் நிர்வாகம் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர், "விரைவில் பொதுமக்களின் இடத்திற்கான பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இதற்காக சென்னை சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்கவும் தயாராக உள்ளேன்." என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...