பெரியார் சிலை மீது காலணி வீசியதால் பரபரப்பு

சென்னை: சென்னையில் பெரியார் சிலையின் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: சென்னையில் பெரியார் சிலையின் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பல்வேறு தலைவர்கள் இன்று மரியாதை செலுத்தினர். சிலைக்கு அருகில் பெரியாரின் புகைப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்த வந்திருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர், திடீரென தான் அணிந்திருந்த ஷூவை கழற்றி பெரியார் சிலை மீது வீசி எறிந்தார். பின்னர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரை உடனடியாக போலீசார் பிடித்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் மற்றும் திமுக தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். பெரியார் சிலையை அவமதித்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். 

இதுபோன்ற செயல்களை ஆரம்ப கட்டத்தில் ஒடுக்கவேண்டும் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், சிலையை அவமதித்தவர் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...