அருவிகளில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம் : நீலகிரியில் குவியும் சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வனப்பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக உதகை, குன்னூர், கோத்தகிரி போன்ற பகுதிகளில் உள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், இதனை சுற்றுலாப்பயணிகள் ரசித்துச் செல்கின்றனர்.



 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்த காரணத்தினாலும், தற்போது அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பல்வேறு பகுதிகளில் புதிய அருவிகள் விழத்துவங்கியுள்ளன.

உதகையில் உள்ள கல்லட்டி நீர்வீழ்ச்சி, குன்னூர் காட்டேரி மற்றும் லால்ஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரியில் உள்ள கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் இதனைக்கான சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மேலும், சாலை ஓரங்களில் இயற்கையாக தோன்றியுள்ள புதிய அருவிகள் இவ்வழியாக பயணிப்போரை பரவசப்படவைத்துள்ளது. 

இந்த அருவிகள் குளிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றாலும், பார்ப்பதற்கு வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காட்சி தருவது, இவ்வழியாக பயணிப்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...