கோவை மத்திய சிறையில் காவலர்கள்-கைதிகள் அறையில் திடீர் சோதனை

கோவை: புழல் சிறையில் கைதிகள், சிறை நிர்வாகங்களுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகிய நிலையில், தற்போது கோவை மத்திய சிறையில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் கைதிகளின் அறையில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கோவை: புழல் சிறையில் கைதிகள், சிறை நிர்வாகங்களுக்கு லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகிய நிலையில், தற்போது கோவை மத்திய சிறையில் 40-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் கைதிகளின் அறையில் திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது.



கோவை மத்திய சிறையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகளுக்கு ஒரு பிரிவும், விசாரணை கைதிகளுக்கு ஒரு பிரிவும் உள்ளது.

சென்னை புழல் சிறையில் கைதிகளின் சொகுசு வாழ்க்கை குறித்த ஆதாரங்கள் வெளியானதால், தற்போது கோவை உட்பட 8-க்கும் மேற்பட்ட மத்திய சிறைகளில் காவல் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புழல் சிறையில் சிறைத் துறை கூடுதல் டிஜிபி அசுதோஷ் சுக்லா வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சிறை வளாகத்தில் செல்போன்கள் மூலம் எடுக்கப்பட்ட கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகைப்படங்கள் தொடர்பாக விசாரணை நடத்தினார்.

அதேபோல புகைப்படங்களில் இடம்பெற்ற பகுதிகளை நேரில் பார்வையிட்டு உறுதிப்படுத்தினார். இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சிறை அதிகாரி தர்மராஜ் தலைமையில் தண்டனை சிறைக் கைதிகள் அடைக்கப்பட்ட "ஏ' பிரிவில் வெள்ளிக்கிழமை சுமார் 5 மணி நேரம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அதில் 20 தொலைக்காட்சிப் பெட்டிகள், 9 எப்.எம். ரேடியோக்கள், 4 மிக்ஸிகள், 4 பழச்சாறு பிழியும் கருவிகள், 27 கத்திகள், 40 லைட்டர்கள், 200 பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், அரிசி, பருப்பு உள்ளிட்ட சமையல் பொருள்கள், 40-க்கும் மேற்பட்ட சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

5 கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றம்:

சிறையில் சொகுசு வாழ்க்கை நடத்திய கைதிகளாக அடையாளம் காணப்பட்ட 5 பேர் தமிழகத்தின் வெவ்வேறு சிறைகளுக்கு சனிக்கிழமை மாற்றம் செய்யப்பட்டனர்.

இதில், கும்பகோணத்தைச் சேர்ந்த முகம்மது ரபீக் (30), கோவை மத்திய சிறைக்கும், திருவாரூர், புளிவலத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராஹிம் (எ) ராஜா (38), சேலம் மத்தியச் சிறைக்கும், கடுங்காவல் தண்டனையில் புழல் சிறையில் இருந்துவரும் இலங்கை, கொழும்புவை சேர்ந்த முகம்மது ரிக்காஸ் பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கும், 2018 மார்ச் முதல் விசாரணை கைதியாக உள்ள சென்னை, மண்ணடியைச் சேர்ந்த முகம்மது ஜாகீர் (47) வேலூர் மத்தியச் சிறைக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்த ரபீக் (எ) நூருதீன் (28) திருச்சி மத்திய சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

இவர்கள் 5 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் தலைமையில் 45-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6.45 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் எந்தவிதமான சொகுசு பொருட்களோ, தடை செய்யப்பட்ட பொருட்களோ கிடைக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...