கேரளாவில் பாலியல் புகாருக்கு ஆளான பிஷப் பதவி விலகல்

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவியிலிருந்து விலகினார்.

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் பிராங்கோ முல்லக்கல் பதவியிலிருந்து விலகினார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காடு பகுதியில் சிரியோ மலபார் கத்தோலிக்க தேவலாயத்திற்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பணிபுரிந்த பிஷப் பிராங்கோ முல்லக்கல் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் பாலியல் பலாத்காரப் புகார் கூறியுள்ளார். பிஷப் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இதனை மறுத்த பிஷப், இந்த விவகாரத்தின் பின்னணியில் சதி உள்ளதாகவும், கன்னியாஸ்திரி மீதான புகார் குறித்து விசாரணை நடத்தியதால் தன் மீது அவர் புகார் கூறியதாகவும் கூறியிருந்தார். 

இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராக பிஷப்புக்கு கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில், பிராங்கோ முல்லக்கல் பிஷப் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே, முல்லக்கல் மீதான புகார் தொடர்பாக வாடிகன் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான தேவாலய பிரதிநிதிகள் வாடிகனில் ஆலோசனை நடந்து வருகிறது. சில நாட்களில் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...