மனித - யானைகள் மோதலை தடுக்க யானைகளை அடையாளம் காண கோவை வனத்துறையினர் திட்டம்

கோவை : மனித - யானைகள் மோதலை தடுக்கும் வகையில், யானைகளின் அடையாளத்தை காண கோவை மாவட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.


கோவை: மனித - யானைகள் மோதலை தடுக்கும் வகையில், யானைகளின் அடையாளத்தை காண கோவை மாவட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மனித - விலங்குகள் மோதல் அதிகளவில் காணப்படுகிறது. எனவே, அதனை தடுக்க பல்வேறு முயற்சிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அதில், யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து மனித - யானைகள் மோதலை தடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இந்த மோதல் சம்பவத்திற்கு தீர்வு கிடைப்பதுடன், யானைகள் மற்றும் மனிதர்கள் ஒருங்கிணைந்து வாழவும் வழிவகை செய்யப்படும் என நம்பப்படுகிறது. 

இத்திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம், கோவையில் யானைகளின் பாதுகாப்பு ஏற்படுவதுடன், விவசாயிகள், யானைகளின் மோதல்கள் தவிர்க்கப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் யானைகள், மனிதர்கள் உயிரிழப்புகள் தடுக்கப்படுவதாக கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாவலரும், முதுமலை புலிகள் காப்பகத்தின் களஇயக்குநர் தீபக் ஸ்ரீவத்ஸவா கூறுகிறார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், "கோவை வனப்பகுதிக்குட்பட்ட யானைகளுக்கு என தனி விவரங்கள் சேகரிக்கப்படும். ஒவ்வொரு யானைகளும் பல்வேறு கோணங்களில் புகைப்படங்கள் எடுத்து வைக்கப்படும். புகைப்படத்தின் மூலம் விலங்குகளின் நடத்தை மற்றும் குணாதியசங்கள் குறித்து விவரிக்கப்படும். மேலும், மனிதர்களைப் போலவே, யானைகளின் குணாதியசங்களில் வேறுபாடிருக்கும்," இவ்வாறு சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறினார்.



ஒவ்வொரு யானைகளையும் அதன் காதுகளை வைத்து வித்தியாசப்படுத்தப்படும். அதன் உடல் உறுப்புகளில் காதுகள் தனித்துவம் வாய்ந்ததாகும்.

"யானைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டால், அவற்றை அடையாளப்படுத்துவது எளிதாகும். மேலும், அடையாளம் காணப்பட்ட யானைகளின் குணாதிசயங்கள் மக்கள் குடியிருப்புகளுக்கு அருகே வெளிக்காட்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில், குடியிருப்புகளை கண்காணிக்கும் போது, சில ஒற்றை யானைகள் இடம்பெயர்வது கண்டறியப்படுகிறது. மேலும், டிரான் கேமராக்களின் மூலம், யானைகளின் இருப்பிடங்களைக் கண்காணிப்பதன் மூலம், மனித - யானை மோதல்கள் தடுக்கப்படுகின்றன," இவ்வாறு கோவை மாவட்ட தலைமை வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து, கூடலூர் மேற்கொள்ளப்பட்டுள்ள மனித - யானை மோதல்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூடலூர் வனஅதிகாரிகளிடம், கோவை வன அதிகாரிகள் கேட்டறிந்தனர். சோழா அறக்கட்டளையுடன் இணைந்து யானைகள் கண்காணிப்பு பணிகளில் கடந்த 3 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ள கூடலூர் வன அதிகாரிகள், 120 யானைகளின் புகைப்படங்களின் கூடிய தகவல்களை சேகரித்து வைத்துள்ளனர். மேலும், இத்திட்டம், எதிர்பார்த்ததைவிட நல்ல முடிவுகளை அளிப்பதாகவும், கடந்த ஆண்டில் 60 சதவீத மோதல்கள் தடுக்கப்பட்டுள்ளதாக கூடலூர் மூத்த வன அதிகாரி தெரிவித்துள்ளார். 



"எங்களது கள அதிகாரிகள்பலவேறு கோணங்களில் யானைகளை புகைப்படம் எடுத்து எங்கள் தகவல் சேகரிப்பு மையத்திற்கு மொபைல் போன் மூலம் அனுப்பி வைக்கின்றனர். இது விலங்குகள் தொடர்பான விவரங்கள் மற்றும்அதன் இருப்பிடம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள உதவுகிறது." என்கின்றனர் அதிகாரிகள்.

மேலும், தகவல்கள் சேகரிக்கப்பட்ட யானைகளில் ஒருசில யானைகள் மட்டுமே தீங்கு விளைவிப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...