அண்ணாவின் 110-வது பிறந்த நாள் இன்று : கோவையில் பல்வேறு இடங்களில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை : பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு கட்சியினர், தொழிற்சங்கங்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.


கோவை : பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி, கோவையில் பல்வேறு இடங்களில் அவரது சிலைகள் மற்றும் படங்களுக்கு கட்சியினர், தொழிற்சங்கங்கள் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.



கோவை ஹூசூர் சாலையில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் இருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலைக்கும், முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், கோவை மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி., அருண்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், ஆறுகுட்டி, கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் செ.ம. வேலுசாமி, முன்னாள் அமைச்சர் தாமோதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.ராஜூ, த.மலரவன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதேபோல, அக்கட்சியின் சார்பு அமைப்புகள் சார்பில் பல்வேறு இடங்களில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அண்ணாவின் 110-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இரண்டு நாட்கள் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் தலா நான்கு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதேபோல, கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் தி.மு.க,வினர் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

சுந்தராபுரத்தில், பகுதி செயலாளர் உதயக்குமார் தலைமையில் தி.மு.க.,வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அ.ம.மு.க., சார்பில் சுங்கம் பகுதியில் உள்ள மாநகர மாவட்ட அலுவலகத்தில் சிறுபான்மையினர் குழு தலைவர் தாராசபி தலைமையில் அக்கட்சியினர் மலரஞ்சலி செலுத்தினர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...