கோவையில் முதற்கட்டமாக நாளை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் : மாநகரில் போக்குவரத்து மாற்றம்

கோவை: முதற்கட்டமாக நாளை நடைபெறும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை: முதற்கட்டமாக நாளை நடைபெறும் விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை முன்னிட்டு மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் நாளை இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பாரத் சேனா, அனுமன் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் குனியமுத்தூர் தர்மராஜா கோயிலில் இருந்து புறப்பட்டு பாலக்காடு சாலை வழியாக சென்று குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்படுகிறது. அதேபோல, சுமார் இரண்டு மணிக்கு போத்தனூர் சாரதாமில் சாலையில் ஆரம்பித்து சங்கம் வீதியில் ஒன்றுகூடி சுந்தராபுரம் வழியாக பொள்ளாச்சி சாலையில் சென்று குறிச்சி குளத்தில் கரைக்கப்படுகிறது. 

இதனால், பொதுமக்கள் நலன் கருதி கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யாவின் உத்தரவின் பேரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார் முன்னிலையில் போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போக்குவரத்துக் காவலர்கள் மற்றும் இதர காவலர்கள் இணைந்து போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுவர். 

மேலும், விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை மதியம் முதலே கோவை மாநகருக்குள் லாரிகள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை 2 மணி முதல் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் குறிச்சி பிரிவிலிருந்து, போத்தனூர் கடைவீதி, ரயில் கல்யாண மண்டபம், போத்தனூர் புதுப்பாலம்,ஜிடி டேங்க் என செட்டிபாளையம் சாலை வழியாக சென்று ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி சாலை அடையலாம். 

அதேபோல, பாலக்காடு சாலையில் இருந்து உக்கடம் நோக்கி வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் கோவைபுதூர் பிரிவில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக ஆசிரம்பள்ளி சந்திப்பு வந்து புட்டுவிக்கி சாலை வழியாக உக்கடம் வரலாம். மேலும், பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக பாலக்காடு சாலை செல்லும் பேருந்துகள் மற்றும் இதர வாகனங்கள் பொள்ளாச்சி சாலை மகாலட்சுமி கோவிலில் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைந்து, பின்னர் மதுக்கரை மார்க்கெட் சாலை வழியாக வந்து பிள்ளையார்புரம் சந்திப்பில் இடது பக்கம் திரும்பி சுகுணாபுரம் வந்து பாலக்காடு சாலையில் அடையலாம். 

மேலும், பொள்ளாச்சி சாலையில் இருந்து சுந்தராபுரம் வழியாக உக்கடம் செல்லும் வாகனங்கள் ஈச்சனாரி பிரிவிலிருந்து வலது பக்கம் திரும்பி ஈச்சனாரி செட்டிபாளையம் சாலையை அடைந்து, ஜிடி டேங்க், போத்தனூர் புதுப்பாலம் வழியாக போத்தனூர் கடைவீதி வந்து குறிச்சி பிரிவு வந்து ஆற்றுப் பாலம் வழியாக உக்கடம் செல்லலாம், இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...