திருப்பூரில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவில் கலசம் திருட்டு : சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2-ம் கட்ட விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு உட்பட்ட 1,500 ஆண்டுகள் பழமையான வகையறா கோவில் கலசம் கொள்ளை போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கோவில் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு உட்பட்ட 1,500 ஆண்டுகள் பழமையான வகையறா கோவில் கலசம் கொள்ளை போன சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், கோவில் ஊழியர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

காங்கேயம் அடுத்துள்ள அரசம்பாளைத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான பட்டாலி பால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கு முன்புறம் ஐந்து முகங்களும், பின்புறம் யாரும் பாக்க முடியாதபடி ஒருமுகம் உள்ளது. 



இந்த சிறப்புமிக்க கோவில் கருவறையின் மேல் உள்ள கோபுரத்தில் இருந்த பழமையான கோபுரகலசம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருட்டு போனது. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காங்கேயம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. 

ஐம்பொன்னால் ஆன கலசம் காணாமல் போனதற்கு சிலை கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 



இந்நிலையில் இன்று மீண்டும் டி.எஸ்.பி சந்திரசேகர் தலைமையில் கோவில் ஊழியர்கள் 22 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து நாளையும் விசாரணை நடைபெறும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...