கோவை : சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை பிரச்சாரம் நாளை (செப்.,15) முதல் தொடங்குகிறது.
கோவை: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் தூய்மை பிரச்சாரம் நாளை (செப்.,15) முதல் தொடங்குகிறது.
இந்திய ரயில்வே 'ஸ்வச் பாரத்' திட்டத்தை செயல்படுத்துவதில் முன்னோடியாக உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கிய தூய்மை பிரச்சாரத்தில் ரயில் பயணிகள், ஊழியர்கள், மாணவர்கள், தன்னார்வ நிறுனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வர்த்தக அமைப்பினரிடையே மிகுந்த ஆதரவை பெற்றுள்ளது.
தெற்கு ரயில்வே பயணிகள் சார்ந்த மண்டலமாக உள்ளது. ரயில்நிலையங்களை தூய்மையாக வைத்திருப்பது, ரயில்களை சுத்தமாக வைத்திருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது. ரயில் நிலையங்களை தூய்மையைப் பேணுதல், தண்டவாளங்களை சுத்தமாக வைத்திருத்தல், ரயில்வே குடியிருப்புகளை தூய்மையாக வைத்திருத்தல், சுகாதாரமான குடிநீர் வழங்குதலை முன்னிறுத்தி தூய்மை பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.
"ஸ்வச்ச ஹாய் சேவா-பக்வாரா" 2018 :
ஆண்டுதோறும் இந்திய ரயில்வே செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 2-ம் தேதி வரை மிகப்பெரிய அளவிலான தூய்மைப் பிரச்சாரத்தை மேற்கொள்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளில் தூய்மை பணிகள் செய்யப்படும். அந்த வகையில், செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கும் தூய்மைப் பிரச்சாரத்தில் ரயில்வே ஊழியர்கள், துப்புரவு ஊழியர்கள் உறுதி மொழி ஏற்கின்றனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தின் அருகே சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், தன்னார்வ நிறுவனங்கள், சமய அமைப்புகள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவை மூலம் கருத்துப்பட்டறைகள், பயிலரங்குகள் மூலம் தூய்மை பிரச்சாரம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடத்தப்படும். சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களில் செப்டம்பர் 15-ம் தேதி காலை 9.30 மணிக்கு தூய்மை பிரச்சாரம் தொடங்கும் என கோட்ட மேலாளர் யு. சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.