கோவையில் சர்தார் வல்லபாய் படேல் பற்றிய புத்தகம் வெளியீடு

கோவை: எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய புத்தகம் கோவையில் வெளியிடப்பட்டது.

கோவை: எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா எழுதிய சர்தார் வல்லபாய் படேல் பற்றிய புத்தகம் கோவையில் வெளியிடப்பட்டது.

'தி மேன் ஃகூ சேவ்டு இண்டியா - சர்தார் வல்லபாய் படேல் அன்ட் ஹிஸ் ஐடியா ஆப் இண்டியா' (The Man Who Saved India - Sardar Patel and his Idea of India) என்ற தலைப்பிலான புத்தகத்தை எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா எழுதினார். இந்தப் புத்தக வெளியீட்டு விழா எஸ்.என்.ஆர்., கலையரங்கில் இன்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரவி சாம் கலந்து கொண்டார். 



நிகழ்ச்சியில் புத்தகத்தின் முதல் பிரதியை ரவி சாமுக்கு எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா வழங்கினார். பின்னர், எழுத்தாளரின் கையெழுத்துடன் இடம்பெற்ற புத்தகங்கள் எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் தலைமை வர்த்தக அலுவலர் ஸ்வாதிரோகித் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கே. கருணாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, எழுத்தாளர் ஹிந்தோல் செங்குப்தா பேசியதாவது :- சர்தார் வல்லபாய் படேலின் பெருமையை ஒவ்வொரு இந்திய குடிமகனும் நினைத்துப் போற்ற வேண்டும். ஏனெனில், அரசியல் போர்வை இல்லாமல் வல்லபாய் படேலை தவிர்த்து இந்தியாவை வேறு யாராலும் பாதுகாத்திருக்க முடியாது. பிரிட்டீஷாரிடம் இந்தியாவை, ஜனநாயக நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாற்றியதில் சர்தார் வல்லபாய் படேலின் பங்கு மகத்தானது. 

மகாத்மா காந்திக்கு சுதந்திரப் போராட்டம், ஜவஹர்லால் நேருவுக்கு கருத்துவாதம் எனில், சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் நகர்வு என்றால் வல்லபாய் படேலின் நடைமுறைவாதமாகும். பல்வேறு சிறப்புகளை கொண்ட படேலுக்கு அவர் மறைந்து 40 ஆண்டுகளுக்கு பிறகே, அதாவது 1991-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது, என்றார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...