கோவையில் தடையை மீறி விற்பனை செய்யப்படும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள்

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகள் மாசடைவதை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், சிலைகள் செய்வதில் விதிமுறைகளையும் கடந்த 2010 ஆம் ஆண்டு மாசுக்கட்டுப்பாடு மையம் விதித்துள்ளது. அதேவேளையில், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும், மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, கோவையில் இயற்கைப் பொருட்களால் ஆன விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இது கோவை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் தடையை மீறி சுண்டக்காமுத்தூர், தெலுங்குபாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கு போன்ற காரணத்தால் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் தயாரிக்கப்பட்ட சிலைகள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனா, இது தொடர்பான ஆன்லைன் பக்கங்களை கண்டறிந்து, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

"சாலையோரங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் வர்ணம் பூசாத சிலைகள் வாங்கி வரப்பட்டு, பின்னர் வர்ணம் பூசப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றனவா..? என்பதை அதிகாரிகள் ஆய்வு நடத்தினால்தான், தடையை மீறி தயாரிக்கப்பட்ட சிலைகளின் விற்பனையை தடுக்க முடியும்," என்கிறார் சுற்றுச்சூழல் ஆர்வலர்.

"பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொருளால் உருவாக்கப்பட்ட சிலைகளை நீரில் கரைக்கும் போது அவை முழுமையாக கரைவதில்லை. நீரின் அடியில் இருக்கும் இந்தப் பொருளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மேலும், இவற்றை உண்ணும் மீன்களும் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது," எனக் கூறுகிறார் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன்.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்புகிறீர்களா..? அப்படியெனில் கீழே இருக்கும் எண்களையோ, இடத்தையோ தொடர்பு கொள்ளுங்கள்



Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...