விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

கோவை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பினர் சார்பில் 1,892 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

விநாயகப் பெருமான் அவதரித்த தினத்தை விநாயகர் சதுர்த்தி விழாவாக நாடெங்கும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளிலும், தெரு முனைகளிலும் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினால் பாவங்களை விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வதாகவும், பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதன் மூலம் பாவங்கள் தீரும் எனவும் நம்பப்படுகிறது.



இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாநகரில் 394 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய காவல்துறை அனுமதி அளித்துள்ளதன் பேரில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா, அனுமன் சேனா, விவேகானந்தர் பேரவை என பல்வேறு இந்து அமைப்புகள் சார்பிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு காலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் பகுதியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியில் கோமாதா பூஜை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. அதே பகுதியில் உள்ள மற்றொரு கோவிலில் பாற்கடலில் விநாயகர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிப்பது போல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை மாநகர் ரத்தினபுரி பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள 9 அடி விநாயகர் சிலைக்கு 5 லட்சம் ரூபாயில் பண மாலையிட்டு பிரதிஷ்டை வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. 

மேலும், ராஜவீதி பகுதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள 16 அடி உயர நவதானிய விநாயகர், ராஜ வீதியில் விவேகானந்தர் பேரவை சார்பில் ரசாயன கலப்படம் அற்ற அன்னபட்ஷி விநாயகர் சிலைகள் என கோவை மாவட்டத்தில் 1498 இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை மறுதினம் மற்றும் வருகிற 17-ஆம் தேதி நீர்நிலைகளில் விஸர்ஜனம் செய்யப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசியாவிலேயே உயரமான கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள 19 அடி உயரம் கொண்ட 900 டன் எடையில் ஒரே கல்லால் ஆன முந்தி விநாயகர் சிலைக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடத்தப்பட்டன. முன்னதாக, விநாயகருக்கு செய்யப்பட்ட சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் விநாயகப் பெருமானை தரிசித்து வருகின்றனர். இதேபோல, ஈச்சனாரி கோவிலில் விநாயகருக்கு தங்க காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் கலை நிகழ்ச்சிகள், விளக்கு பூஜை என பலஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...