நாசாவில் நவம்பரில் நடக்கும் சர்வதேச கருத்தரங்கில் உதகையைச் சேர்ந்த பள்ளி மாணவன் பங்கேற்பு

நீலகிரி : அமெரிக்காவின் நாசாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொள்ள உதகை கிரசன்ட் கேஸ்டல் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் கனிஷ்க் பங்கேற்க உள்ளார்.

நீலகிரி : அமெரிக்காவின் நாசாவில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் கருத்தரங்கில் கலந்து கொள்ள உதகை கிரசன்ட் கேஸ்டல் பள்ளியில் 10 ம் வகுப்பு படிக்கும் மாணவர் கனிஷ்க் பங்கேற்க உள்ளார். 

பள்ளி மாணவர்களுக்கு இடையே தேசிய அளவிலான விண்வெளி அறிவியல் கட்டுரை போட்டி அமெரிக்காவில் உள்ள நாசாவின் கீழ் இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் சார்பில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. 'நான் ஒரு நாசா முதன்மை அதிகாரியாக இருந்தால்', 'செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரகவாசியை சந்தித்தால்', 'விண்வெளியில் ஒரு நாள்', 'வானவியல் விஞ்ஞானத்தில் பங்களிப்பும், சார்பும்' ஆகிய 4 தலைப்புகளின் கீழ் கட்டுரை போட்டி நடந்தது.



இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3,000-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கட்டுரைகளை ஆன்லைன் வழியாக சமர்ப்பித்தனர். அதில், 500 பேரை நாசாவின் துறை தேர்வு செய்தது. அவர்களில் 300 மாணவர்களின் கட்டுரைகள் நாசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இறுதியில், தேசிய அளவிலான விண்வெளி அறிவியல் கட்டுரை போட்டியில் நீலகிரி மாவட்டம் உதகை கிரசன்ட் பள்ளியில் 10–ம் வகுப்பு படிக்கும் மாணவர் கனிஷ்க் முதலிடம் பிடித்தார். அவருக்கு பள்ளி முதல்வர் உமர் பரூக், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

இந்த நிலையில், நாசாவில் சர்வதேச அளவில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு வருகிற நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில், மாணவர் கனிஷ்க் பங்கேற்க உள்ளார். 

இது குறித்து மாணவர் கனிஷ்க் கூறும் போது ;- தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. விண்வெளி அறிவியல் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறேன். நாசாவில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்துகொள்வது பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே தனது லட்சியம், என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...