சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளாவிடில் கொலை செய்து விடுவதாக பழங்குடியினத்தவர்களை மிரட்டும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

கோவை : தலை,கால் நகங்கள் எடுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனைமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை : தலை,கால் நகங்கள் எடுக்கப்பட்டு கொல்லப்பட்ட சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆனைமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் பந்தக்காலம்மன் பகுதியைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது மகன் கனகராஜ் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த முருகன், குமார், அருண் என்பவர்களுடன் பி.ஏ.பி., வாய்க்காலில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, இரண்டு ஜீப் மற்றும் வேனில் வந்த பொள்ளாச்சி வனச்சரகத்தை சேர்ந்த ரேஞ்சர் காசிலிங்கம், வனஅதிகாரி சரண்யா மற்றும் பிரபாகரன் முருகேஷ் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். 

வனத்துறையினர் பழங்குடியின வாலிபர்கள் நான்கு பேரையும் வேனில் ஏற்றி ஆழியாறு வனத்துறை சோதனை சாவடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நால்வரையும் கடுமையாக தாக்கி கடந்த வாரம் சிறுத்தையின் கால் நகம், தலையை எடுத்துவிட்டு, கொன்று காட்டுக்குள் வீசியதாக ஒப்புக்கொள்ளச் சொல்லி வெள்ளை பேப்பரில் கையெழுத்து கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அவர்களை அடித்துவிட்டு, வனத்துறையினர் சிறுத்தை எப்படி இறந்து கிடந்ததோ, அதேபோல, கொன்று விடுவதாக மிரட்டியுள்ளதாக தெரிகிறது. மேலும், முருகன் என்பவருக்கு இடுப்பில் இரண்டு ஊசி போட்டுள்ளனர். உடனே அவர் மயக்கமடைந்துள்ளார். அதே போல அனைவரையும் கொன்று விடுவதாக வனத்துறையினர் அச்சுறுத்தி இருதய அறுவை சிகிச்சை செய்த கனகராஜை தாக்கியுள்ளனர். 

இந்த நிலையில், சிறுத்தையை கொன்றதாக ஒப்புக்கொள்ளுமாறு பழங்குடியின வாலிபர்களை அடித்து விஷ ஊசி போட்டு கொன்று விடுவதாக மிரட்டும் வனத்தல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆனைமலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும், மலைவாழ் மக்களின் வீடுகளில் வனத்துறை அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, ஆனைமலை காவல் ஆய்வாளரிடம் வனத்துறையினர் குறித்து புகராளித்தனர்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...