மகாகவி பாரதி நினைவு நாளை முன்னிட்டு பாரதிபாசறை சார்பில் நினைவு நாள் விழா

கோவை: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பாரதிபாசறை சார்பில் அவினாசி சாலையில் உள்ள அரங்கில் நினைவு நாள் விழா கூட்டம் நடைபெற்றது.

கோவை: மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு பாரதிபாசறை சார்பில் அவினாசி சாலையில் உள்ள அரங்கில் நினைவு நாள் விழா கூட்டம் நடைபெற்றது.



இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர் சுப்ரமணிய பாரதியார்.

இவரது பெருமைகளை தமிழகத்தின் வருங்கால இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மறந்துவிடக்கூடாது என்ற நோக்கில் பல்வேறு அமைப்புகள் பல விழிப்புணர்வு செய்தாலும், பாரதியார் பாசறை சார்பாக செய்யும் விழிப்புணர்வு மாணவர்களின் உள்ளத்தில் ஊடுருவுகிறது. 

இதற்காக, பாரதியின் கவிதைகள் மற்றும் வாழ்கை குறித்த பேச்சு போட்டிகள் மற்றும் கவிதை போட்டிகள் பாரதி பாசறை சார்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பாரதியார் குறித்த சிறப்புகளை எடுத்துரைப்பதற்காக ‘அக்கினிக்குஞ்சு’ என்ற அமைப்பையும் இவர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதியாரை நினைவு கூறும் வகையில், அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஆப் காமர்ஸில் மகாகவி பாரதி நினைவு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன் மற்றும் பாரதி பாசறை நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தலைமை ஏற்ற பாரதிகிருஷ்ணகுமார் கூறியதாவது :- தமிழ் வரலாற்றில் மகா என்று அழைக்கப்படுபவர்களில் முக்கியமானவர் மகாகவி பாரதி. இவர் அடிமையாக இருந்த இந்தியாவிற்கு சுதந்திரம் மட்டும் போதாது அரசியல் விடுதலை தேவை என்ற நோக்கில் கவிபாடியவர். அதேபோல, சமூக விடுதலைக்கு முதல் கையை ஓங்கியவர். இவர் சாதி மதங்களை கடந்து வாழ்ந்தவர் மற்றும் அப்படி வாழ வழிகாட்டியவர். சுயசாதி மறுப்பில் உண்மையானவர்.



இவரின் காணி நிலம் வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கோவையில் இவரின் நூலையும், வாழ்க்கை வரலாற்றையும் ஆய்வு செய்யும் வகையில் காணி நிலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவையில் விரைவில் பாரதியார் பாசறை சார்பில் ஒரு ஏக்கரில் ஆய்வுக் கூடத்தை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...