கோவை : கோவையில் உள்ள பிரதான குளங்களில் மீனவர்களினால் போடப்படும் வலைகள் அங்கு வரும் பறவைகளுக்கு மரணப் பொறிகளாக மாறி வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு உள்ளூரில் இருந்து மட்டுமின்றி, வெளியூர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவைகள் வந்து செல்கின்றன. இந்தப் பறவைகளை அங்கு மீன்பிடிக்க வரும் சில மீனவர்கள் மற்றும் ஒருசில சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால், குளங்களுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எனவே, குளங்களுக்கு வரும் பறவைகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை நகரின் முக்கிய குளமாக கருதப்படும் வாலாங்குளத்தில் பறவைகள் நீந்திச் சென்று மீன்களைப் பிடித்து உணவாக உட்கொள்ளும். அப்படியிருக்க கோவை அரசு மருத்துவமனையை இணைக்கும் சாலையை ஒட்டியுள்ள குளத்தின் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வலைகளை விரித்தனர். அதில், எதிர்பாராதவிதமாக, பறவை ஒன்று சிக்கிக் கொண்டது. இருப்பினும், இதனை கண்ட மீனவர் ஏ. கருப்பசாமி நீரில் குதித்து பறவையைக் காப்பாற்றினார்.

மீன்வலைகளினால் பறவைகள் இதுபோன்று சிக்கும் சம்பவங்கள் அரங்கேறுவது வாலாங்குளத்தில் மட்டுமல்ல. நகரின் பிற பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களில் இந்தநிலை தொடர்கிறது. எனவே, மீன்பிடிக்கும் முறையை ஒழுங்குபடுத்தக் கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"கடலில் மீன்பிடிக்க சீசன் இருப்பதைப் போல, குளங்களிலும் மீன்பிடிக்க சீசனை அறிமுகம் செய்ய வேண்டும். இந்த சீசன் செப்டம்பர் முதல் மார்ச் வரையில் இருக்குமாறு உருவாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த காலகட்டங்களில் மத்திய ஆசியாவில் இருந்து ஏராளமான பறவைகள் கோவையை நோக்கிப் படையெடுத்து வரும். அவற்றிற்கு தொந்தரவு கொடுத்தால், கோவையில் மீண்டும் பறவைகளை காண்பது அரிதானதாகும்," என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர்.
இதேபோல, மீனவர்கள் மீன்பிடிக்கும் நேரம் மற்றும் சாதனங்களை பயன்படுத்துகின்றனரா என்பதை கண்காணிக்க வேண்டும். குளங்களில் மீன்பிடிக்க 24 மணிநேரமும் மீனவர்களை அனுமதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்கின்றனர். மேலும், மீன்பிடி ஒப்பந்த வழிகாட்டுதல்கள் மற்றும் வாய்மொழி உத்தரவுகளை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மீன்வளத்துறை மூத்த அதிகாரிகளிடம் கேட்ட போது, பறவைகள் மற்றும் குளங்களில் இருக்கும் உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என மீனவர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.