நீலகிரியில் குறிஞ்சி பூ திருவிழா தொடக்கம் : படுகர் இன மக்களுடன் மாவட்ட ஆட்சியர் பாரம்பரிய நடனமாடி அசத்தல்

நீலகிரி : உதகையில் அபூர்வ குறிஞ்சி பூ திருவிழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, படுகர் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடி அசத்தினார்.

நீலகிரி : உதகையில் அபூர்வ குறிஞ்சி பூ திருவிழாவை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, படுகர் இன மக்களுடன் பாரம்பரிய நடனமாடி அசத்தினார். 

குறிஞ்சி மலர்கள் மேற்கு தொடர்ச்சி மலையின் வனவளத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட குறிஞ்சி மலர்கள் காணப்பட்டாலும், 46 வகையான குறிஞ்சி மலர்கள் தமிழகம் மற்றும் கேரளா மேற்கு தொடர்ச்சி மலைகளில் காண முடியும். வருடத்திற்கு ஒருமுறை பூக்கும் மினியேச்சர் தற்போது பூங்காக்களிலும், வீட்டு தோட்டங்களிலும் காண முடிகிறது. இவை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் என்ற அபூர்வத்தை கொண்டிருந்தாலும், இந்த வகையான பூக்கள் மிகக் குறைந்த அளவு மட்டுமே பூக்கும். .பலகால அளவில் பூக்கும் குறிஞ்சி மலர்கள் வெள்ளை நிறங்களிலும் காணப்படுகிறது.

இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி, சின்னகுன்னூர், கீழ்கோத்தகிரி, சோலூர், நடுவட்டம், கல்லட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில்முழுவதும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகிறது. தற்போது, குறிஞ்சி பூத்துள்ள நிலையில் தேனீக்கள் தேன்எடுக்க அதிகளவு காணப்படுகிறது.

இவை விவசாயத்திற்கும், வனங்கள் வளர்ச்சிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதால் நீலகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இம்மலர்களை இளம்சமுதாயம், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்,தேனிலவு தம்பதிகள் என இரண்டாம் சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் வனஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் குறிஞ்சி பூதிருவிழா கொண்டாட கோரிக்கை வைத்தனர். 

தற்போது உள்ள காலநிலையில் இந்த மலர்களை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வர வேண்டும் என முடிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகம் குறிஞ்சி பூதிருவிழா கொண்டாட முடிவு செய்தது. அதன்படி, உதகை கல்லட்டி மலை பாதையில் குறிஞ்சி பூக்கள் பூத்துள்ள மலை பகுதியில் குறிஞ்சி பூதிருவிழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். பின்னர், இரண்டாம் சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் இந்த அபூர்வ குறிஞ்சி மலர்களை கண்டுகளிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, படுகர் இன மக்களுடன் இணைந்து ஆட்சியர் பாரம்பரிய நடனமாடி உற்சாகப்படுத்தினார்.

Newsletter

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...